சரத்குமார் சிக்கியதற்கு இது தான் காரணமா..? வெளிவந்தது உண்மை…

0
1714

சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும்  நடிகருமான  சரத்குமார், டி டிவி  தினகரனுக்கு  ஆதரவாக  பிரச்சாரம் மேற்கொண்டால்,  வெற்றி  வாய்ப்பு  சாதகமாக  இருக்கும் என கருதப்பட்டுள்ளது . அதாவது, ஆர். கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சியின் சார்பாக போட்டியிட்ட  வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு  ஆதரவு  தெரிவித்தார் சரத்குமார்.

இதற்கு பின்னணி முன்னணி என்னவென்று  நம்மால்  யூகிக்க முடியும் என்றே கூறலாம். ஆர் கே நகரில் வசிக்கும் ஒட்டு மொத்த  நாடார் ஓட்டுக்களும் தினகரனுக்கு  கிடைக்க வேண்டும் என்பதற்காக,  தினகரன்  மேற்கொண்ட முயற்சி தான்  இது.

தினகரனுக்கு ஆதரவாக,  சரத்குமார்  பிரச்சாரம் செய்ய 7 கோடி ரூபாய் வரை பேசி செட்டில் செய்யப்பட்டதாக தகவல்  வெளியாகி உள்ளது .

கணக்கில் காட்டப்படாத இந்த பணம் எப்படியும் தனது வீட்டில் தான் வைத்திருப்பார் என மோப்பம் பிடித்த  வருமானவரித்துறையினர், தனது அதிரடி சோதனையை தான்  கடந்த 7 ஆம் தேதி நடத்தியது.

ஆனால் பணம் எதுவும் சிக்கவில்லை என்பதால், கொஞ்சம் கெத்தாக இருக்கும் சரத்குமார்  வருமான வரித்துறை அதிகாரிகள் மீது சட்ட பூர்வமாக  நடவடிக்கை எடுக்க  உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments

comments