
‘சலீம்’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அதன் அடுத்த பாகம் உருவாகி வருவது ரசிகர்களிடையேஉற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்கு ‘மழை பிடிக்காத மனிதன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாகவும் சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர்.
மேலும் ரமணா, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தை ‘இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தில் விஜய் ஆன்டனி பாடல்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். பின்னணி இசையை அச்சு ராஜாமணி மேற்கொண்டுள்ளார்.
இசை, நடிப்பு, இயக்கம், எடிட்டிங் என பன்முகத்திறமை கொண்டவராக உள்ள விஜய் ஆன்டனி ‘நான்’ படத்தின் தொடர்ச்சியாக ‘சலீம்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டுக்குள்ளானது.
இந்நிலையில் ‘சலீம்’ படத்தின் இரண்டாவது பாகம் அதிலும் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாக இருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.
Team #MazhaiPidikkathaManithan
மழைபிடிக்காதமனிதன்
Stay Safe at home. Hope the rains stop & bring normal life back to us. We will overcome from this.
ChennaiRains
TamilNaduRains
#MPM #Salim2
@vijayantony @vijaymilton @FvInfiniti @akash_megha @dhananjayaka @realsarathkumar #Saranya Ponvannan @murlisharma72 @AmbarPruthvi @Donechannel1