கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்துக்கு ‘மாறன்’ எனத் தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது