ஆரவை இன்னும் காதலிக்கிறேனா? ஓவியா அதிரடி !

0
1192

நான் ஏன் ஆராவை காதலிக்கணும்?’-மனம் மாறிய ஓவியா!-வீடியோ சென்னை: ஆரவை இன்னும் காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, எனக்கு இவ்வளவு பேரின் லவ் கிடைத்துள்ளபோது நான் ஏன் ஒரு ஆளை மட்டும் லவ் பண்ணனும் என்றார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியா சரவணா ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அவரை பார்க்க ஓவியா ஆர்மிக்காரர்கள் அங்கு கூடினர். கடை திறப்பு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,  மேடையில் பேசுவது எனக்கு பழக்கம் இல்லை. அதனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை நான் எதுவும் பேச அனுமதி இல்லை. இன்றைய உலகத்தில் நிபந்தனையில்லா அன்பு கிடைப்பது அரிது. எனக்கு அத்தகைய அன்பு கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. மக்களுக்கு என் கேரக்டர் பிடித்துள்ளது.  ஆரவை இன்னும் காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, எனக்கு இவ்வளவு பேரின் லவ் கிடைத்துள்ளபோது நான் ஏன் ஒரு ஆளை மட்டும் லவ் பண்ணனும் என்றார் ஓவியா. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த புதிதில் ஆரவை இன்னும் காதலிப்பதாக தெரிவித்தார் ஓவியா. ஆனால் அதன் பிறகு சிங்கிளாகவும், திருப்தியாகவும் உள்ளதாக ட்வீட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments