அரபு நாடுகளில் இருந்து பாகுபலி நீக்கம்! காரணம் இதுதான்

0
1147
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பாகுபலி நல்ல வசூல் ஈட்டிவருகிறது. 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் இதுவரை வந்துள்ளது. தென்னிந்திய மக்கள் அதிகம் வசிக்கும் அரபு நாடுகளில் (UAE) வசூல் நன்றாக வந்த நிலையில் படம் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
தயாரிப்பாளர் Arka மீடியா மற்றும் தமிழ்நாடு விநியோகஸ்தர் K Productions இடையே உள்ள பண பிரச்சனை காரணமாக படம் UAEயில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
 
இதே பிரச்சனை காரணமாக தமிழ்நாட்டில் பாகுபலி அதிகாலை மற்றும் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
விநியோகஸ்தர் கொடுக்கவேண்டிய பணத்தை இரண்டு வாரத்தில் கொடுக்க தயாரிப்பாளர் கேட்டும், அவர்கள் கொடுக்காததால் ஒரேடியாக படத்தை திரையிட தடை விதித்துவிட்டனர்.

Comments

comments