நடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து !

0
227

நடிகை பார்வதி திருவோத்து, மலையாளம், தமிழ் படங்களில் வித விதமான பாத்திரங்களில், மாறுபட்ட நடிப்பை வழங்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டுக்களை குவிப்பவர். விரைவில் வெளியாகவுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தில் இன்மை பகுதியில் வித்தியாசமான பாத்திரத்தில், அட்டாகாசமான நடிப்பை வழங்கியுள்ளார். தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

இன்மை உருவாக்கம் குறித்து நடிகை பார்வதி திருவோத்து கூறியதாவது…

நடிகர் சித்தார்த் கண்களாலேயே பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் திறமை வாய்ந்த நடிகர். என்னை விட்டு தூரமாக அவர் நின்றாலும், அவர் கண்களின் வழி அவரது உணர்வுகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். படப்பிடிப்பில் இது, எனக்கு நடிப்பில் மிகப்பெரும் உதவியாக இருந்தது அவருடன் இணைந்து நடித்தது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.

இப்படம் ஒரு அறுசுவை விருந்தாக இருந்தது. நடிகர் சித்தார்த் அவர்களும், நானும் படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்னர் zoom calls மூலம் ஆன்லைனில், சிலமுறை பேசி, இப்படம் குறித்து ரிகர்சல் செய்துகொண்டோம். இணையவெளியிலிருந்து அப்படியே படப்பிடிப்பிலும் அதே மாயம் நிகழந்தது அற்புதமாக இருந்தது. எவ்வித தடங்களுமின்றி, மிக எளிதாக இந்த படப்பிடிப்பு நிகழந்தேறியது. முன்னணி கலைஞர்கள் பங்குபெற, அத்தனை பேரின் அர்ப்பணிப்பில், வெகு இயல்பாக, ஒரு அற்புத படைப்பு உருவாகியுள்ளது. திரைத்துறை நண்பர்கள் இணைந்து, தங்கள் சக தோழர்களின் நலனுக்கு இந்த ஆந்தாலஜி திரைப்படத்தினை உருவாக்கியுள்ளது மகிழ்ச்சி என்றார்.

“நவரசா” மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படம். Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். “நவரசா” Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக 190 நாடுகளில் வெளியாகிறது.
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள், இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால், எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படததை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும். சமீபத்திய தகவல்கள், புதிய செய்திகளுக்கு IG @Netflix_IN, TW @NetflixIndia, TW South @Netflix_INSouth மற்றும் FB @NetflixIndia சமூக வலைதளங்களில் இணைந்திருங்கள்.

Comments

comments