நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

0
110

இயக்குனர் சாக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம் கொலையுதிர் காலம். இத்திரைப்படத்தினை யுவன் ஷங்கர் ராஜா தானே இசையமைத்து தயாரித்துள்ளார்.

கொலையுதிர் காலம், ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படத்தின் கருவை மையமாக வைத்து தயாராவதாக தகவல் கசிந்துள்ளது. வாய் பேச முடியாத, காது கேட்காத ஒரு இளம்பெண் சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிக்கொள்வதும், அவனிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதும் ‘ஹஷ்’ படத்தின் கதை.

இந்நிலையில் கொலையுதிர் காலம் படத்தின் விசுவல் புரோமோகள் அல்லது போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த போஸ்டர்களில் இருந்து நயன்தாரா எந்த விதமான கேரக்டரில் நடித்துள்ளார் என்பது ஆர்வத்தை அதிகரித்து கொண்டே போகிறது.

தற்போது இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ஸ்டார்ட் போலாரிஸ் பிச்சர்ஸ் LLP உடன் இணைந்துள்ளது. இந்நிலையில், எட்செடேரா எண்டர்டேய்ன்மென்ட் புரொடியூசர் மதியழகன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த படத்தின் டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துளோம். உண்மையில் இந்த டிரெய்லரை பார்த்த ரசிகர்கள், அதில் உள்ள டெக்னிக்கல் யுத்திகளை வெகுவாக பாராட்டியுள்ளனர். இதற்காக படத்தை வெளியிட உள்ள ஸ்டார்ட் போலாரிஸ் பிச்சர்ஸ் LLP நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

நாங்கள் எந்த படத்தை தயாரித்தால், அந்த படத்தின் சரியான தரத்தில் உள்ளதா என்பதை பார்த்தே பணியாற்ற தொடங்குவோம். இந்த வகையில் கொலையுதிர் காலம் சிறப்பாக வந்துள்ளது. மேலும் இந்த அப்தம் ஹாலிவுட் படத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சென்சாருக்கு அனுப்பியுள்ளோம். இதை தொடர்ந்து படத்தை வரும் மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்ப்பு சென்சார் முடிவுக்கு பின்னர் வெளியிடப்படும் என்று ஸ்டார்ட் போலாரிஸ் பிச்சர்ஸ் LLP தெரிவித்துள்ளது.

Comments

comments